புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (19:31 IST)

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டிற்குப் பேரழிவாக இருக்கும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

mk stalin
அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியான திமுக,  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் பங்கேற்றுள்ளது.

ராமநாதபுரம் அருகேயுள்ள தேவிபட்டனம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் முகவர்கள் கூட்டத்திற்கு 19 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான்   திமுக முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

‘’சொந்தக் கட்சியில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாததால்தான் மாற்றுக் கட்சியில் உள்ள தலைவர்களிடம்  கடன் வாங்கி திமுக விமர்சிக்கிறார்  பிரதமர் மோடி.

இப்போது சகோதரி கனிமொழி சொன்னதால் சிலப்பதிகாரம் புத்தகத்தின் முன்னுரையைப் படிக்க ஆரம்பித்துள்ளா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். அதை அவர் முழுமையாகப் படிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அப்புத்தகத்தைப் படிக்க அவருக்கு முழுமையாக  நேரம் கிடைக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் நிதியமைச்சரின் கணவர் பிரஹல பிரபாகர் எழுதின  The Crooked Timber Of New India என்ற புத்தகத்தை அவர் படிக்க வேண்டும். ஒன்றிய பாஜக அமைச்சர்கள் அனைவரும் அப்புத்தகத்தைப் படிக்க வேண்டும்.  ‘மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது நாட்டிற்குப் பேரழிவாக இருக்கும்’ என்று அப்புத்தகத்தில் பிரஹல பிரபாகர் எழுதியுள்ளதைப் படிக்க வேண்டும்.

அம்மை ஜெயலலிதாவைப் பெற்றி பேசி  நாடாளுமன்றத்தில் முதலைக்கண்ணீர் வடித்த நிர்மலா சீதாராமன், மணிப்பூர் பெண்களைப் பற்றி பேச மனம் வரவில்லையே.  பிரதமரும் ஒப்புக்கு சில நிமிடங்கள் இதைப் பற்றி பேசியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.