புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:08 IST)

தனியாக கட்சி ஆரம்பித்து இருந்தால் 4 ஓட்டுகள் கூட வாங்கி இருக்க மாட்டார்..! யாரை கலாய்க்கிறார் சீமான்... !

Seeman
ஸ்டாலின் தனியாக கட்சி துவங்கி இருந்தால் 4 ஓட்டு கூட வாங்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் வீட்டில் இருப்பவர்கள் கூட வாக்கு அளிப்பார்களா என்பது சந்தேகம் தான் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
நாம் தமிழர் கட்சியின் தருமபுரி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற நோக்கிலேயே நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது என்றார்.
 
தமிழகத்தில் எண்ணற்ற வளங்கள் இருந்தும் ஏழ்மையில் சிக்கித் தவித்து வருகிறோம் என்றும் விவசாயத்தை விட்டு வெளியேரும் துயரம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். ஸ்மார்ட் சிட்டியில் நகர்ப்புற வளர்ச்சியைப் பற்றி மட்டும் கவலைப்படுவார்கள் என்றும் கிராமங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்றும் சீமான் தெரிவித்தார். 

கிராமங்களில் இருந்து தான் மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என குறிப்பிட்டு அவர், டாஸ்மாக்கில் மது விற்பது அரசின் வேலையாக இருக்கும் போது, மக்களுக்கு உணவு தரும் வேலை அரசு வேலையாக இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினார்.
 
அனைத்தையும் தேடித் தேடி தேர்வு செய்யும் மக்கள், தலைவர்களை தேர்வு செய்வதில் மட்டும் தடுமாறுவது ஏன் என சீமான் கூறினார். தி.மு.க., பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரு நன்மையாவது நடந்திருக்கிறதா என்றும் 39 எம்.பி.,க்களை வைத்திருக்கும் தி.மு.க., மக்கள் பிரச்னைகளுக்கு கொடுத்த தீர்வு  எதுவும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

 
தி.மு.க., என்பது ஸ்டாலின் கட்சி இல்லை, அவர் தனியாக கட்சி துவங்கி இருந்தால் 4 ஓட்டு கூட வாங்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் வீட்டில் இருப்பவர்கள் கூட வாக்கு அளிப்பார்களா என்பது சந்தேகம் தான் என்றும் சீமான் தெரிவித்தார்.