செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (22:14 IST)

அந்த பள்ளியின் பழைய மாணவன் நான்...அஸ்வின் கண்டனம்

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன், ஆசிரியர், வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் 3 மணி நேரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நேற்று இரவு என்னைத் தொந்தரவு செய்தது.  கழித்தேன். எனக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனது இரு பெண் குழந்தைகளும் அந்தப் பள்ளிக்குத் தான் செல்லுகின்றனர். தற்போது ராஜகோபாலன் பெயர் வெளியே வந்துவிட்டது. இதுபோன்ற செயல்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.