1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (12:33 IST)

தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்: டெல்லியில் இன்று கையெழுத்து

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பத்ற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்ததம் இன்று கையெழுத்தாவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஹைட்ரோகார்பன் இருக்கும் இடங்களைக் கண்டறியும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு உருவானது. சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் இத்திட்டம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது எனக்கூறிப் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர். இதனால் தமிழகத்தின் கதிராமங்கலத்தில் நடைபெற்று வந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் 55 மண்டலங்களை ஹைட்ரோகார்பன் எடுக்க இந்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் மூன்று மண்டலங்கள் தமிழகத்தில் உள்ளது. இந்த மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமையை ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு இந்திய அரசு அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிராதன் முன்ன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.