புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (15:53 IST)

தமிழக அரசின் இலவச சைக்கிளில் கர்நாடக அரசு சின்னம்: அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்ற்ன.

இந்த நிலையில் தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் கர்நாடக அரசு சின்னம் இடம்பெற்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் இதுகுறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையில் தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் கர்நாடக அரசு சின்னம் இடம்பெற்றது எப்படி? என்றும், இலவச சைக்கிள் விஷயத்தில் கூட கவனமாக இருக்க மாட்டீர்களா? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தரமற்ற சைக்கிள்கள் என கர்நாடகா அரசு தூக்கி வீசிய இலவச சைக்கிள்களை, தமிழக அரசு வாங்கி மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.