வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (14:41 IST)

கர்நாடக அரசு நிராகரித்த சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கும் தமிழக அரசு?

கர்நாடக அரசு இது தரமற்ற சைக்கிள் என நிராகத்த சைக்கிள்களை தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வருடா வருடம் இலவச சைக்கிள்கள், மடிக்கண்னி, புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்குவது வழக்கம். அப்படி இந்த வருடம் மாணவ்ர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இசவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 
அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுகாளி கிராமத்தில் இருக்கும் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆயிரத்து 524 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். 
 
சைக்கிள்களை வாங்கிய மாணவ மாணவிகள, சைக்கிளின் கூடையில் கர்நாடக அரசின் முத்திரையை பார்த்து குழம்பினர்.
பின்னர் தான் இதன் பின்னர் உள்ள ஊழல் வெளியே வந்தது. கர்நாடக அரசு அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  கொடுக்கவிருந்த இந்த சைக்கிள் தரமற்றவை என்பதால், அம்மாநில அரசு இதனை நிராகரித்து விட்டது. 
 
அப்படி அங்கு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.