திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (14:46 IST)

குடித்து விட்டு கும்மாளம் போடுவது ஆங்கிலப் புத்தாண்டு… இந்து முன்னணியின் சர்ச்சை போஸ்டர்!

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூர் இந்து முன்னணியினர் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நாளாக ஆங்கிலப் புத்தாண்டு நாள் உள்ளது. இதையடுத்து நேற்று முதலில் நியுசிலாந்து புத்தாண்டு கொண்டாடியதை அடுத்து வரிசையாக ஒவ்வொரு நாடும் புத்தாண்டுகளைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா ஒட்டுமொத்தமாக இன்று புத்தாண்டை கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளோடு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் இந்து முன்னணியினர் ஆங்கிலப் புத்தாண்டை விமர்சனம் செய்யும் விதமாக ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ’குடித்துவிட்டு கும்மாளம் போடுவது ஜனவரி -1. பெரியவர்களிடம் ஆசி பெற்று ஆலயம் செல்வது சித்திரை -1. அந்நிய புத்தாண்டை புறக்கணிப்போம். தமிழர் பண்பாட்டைக் காப்போம்’ என எழுதப்பட்டுள்ளது.