1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (14:07 IST)

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

தளபதி விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு சில அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி உள்பட பல பிரபலங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று வதந்தி கூறப்படும் நிலையில் அவர்களின் புதுவை முதல்வர் ரங்கசாமியும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று புதுவை முதல்வர் ரங்கசாமி இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள், அவர் நன்றாக வர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன், எல்லாவற்றிற்கும் மேல உயர வாழ்த்துகிறேன்.

இதுவரை மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வரவில்லை, ஒருவேளை அழைப்பு வந்தால் அது குறித்து சிந்திப்போம்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய் கட்சியின் மாநாட்டிற்கு புதுவை முதல்வர் ரங்கசாமி அழைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் விஜய் மற்றும் ரங்கசாமி நேரில் சந்தித்து சில முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva