புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (07:52 IST)

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறை நாட்கள் முடிவடைந்து தற்போது பொதுமக்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பி கொண்டிருப்பதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 
 
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக சென்னை தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்தின நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகளும் அதிக அளவில் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர் 
 
சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva