வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (10:50 IST)

சென்னையில் கனமழை; போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
அடையாறு, கோடம்பாக்கம், திருவலிக்கேணி, கிண்டி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
சென்னையில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வானக ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.