புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (08:54 IST)

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு: கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வங்க கடலில் உருவாகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் முழுவதிலும் டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.