செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (17:35 IST)

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை !

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த இரண்டு நாட்களாக நிலவிய நிலையில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வரவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை, சேலம், கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.