வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (11:17 IST)

’கனிமொழி’க்கு மறுமொழி கொடுத்த எச்.ராஜா… திமுக மீது எச்.ராஜா பாய்ச்சல்

திமுக எம்.பி. கனிமொழியின், மாட்டுகறி குறித்த டிவிட்டர் பதிவுக்கு, பதிலளித்து மறுமொழி கொடுத்துள்ளார் பாஜகவைச் சேந்த எச்.ராஜா.

சென்ற வாரம் நாகையில் ஒரு இளைஞர் மாட்டுக்கறி சூப் குடிப்பதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அவர் மாட்டுக்கறி சாப்பிட்டதை கண்டித்து, ஹிந்து அமைப்பினர் அவரை தாக்கினர். இந்நிலையில் அந்த ஹிந்து அமைப்பினரை கண்டிக்கும் வகையிலும், உணவு என்பது அவரவர்களின் உரிமை என்று வலியுறுத்தும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் மாட்டுகறி சாப்பிடுவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டனர். மேலும் #beefforlife (வாழ்நாள் முழுவதும் மாட்டுகறியே) என்ற ஹாஸ் டாக்குடன் கிட்டதட்ட இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று திமுக எம்,பி, கனிமொழி, தனது டிவிட்டர் பதிவில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞன் தாக்கப்பட்ட சம்பவத்தை குறித்து, “எதை உண்பது எனபதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே.மற்றவர்கள் அல்ல” என குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு அந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, கனிமொழியின் பதிவுக்கு பதில் மொழி அளிப்பது போல, “உண்மை சகோதரி, எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பம் அல்ல” என கூறியுள்ளார். அதாவது ஹிந்தி திணிப்பை திமுக பல காலமாக எதிர்த்து வருவதால், அதனை மேற்கோள்காட்டி எச்.ராஜா அந்த டிவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பதிவின் பின்னோட்டத்தில் எச்.ராஜாவுக்கு ஆதரவாக பல பாராட்டுகள் குவிகின்றன.