கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்தார்களா காவலர்கள்? – எச்.ராஜா ஆவேசம்!
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் கரூரில் போலீஸார் விநாயகர் சிலைகளை உடைத்ததாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பொதுவெளியில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இவ்வாறான தடை உள்ள நிலையில் நேற்று இரவு கரூரில் சிலர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை கூட்டமாக எடுத்து சென்றதாகவும், அதை போலீஸார் தலையிட்டு தடுத்தபோது ஏற்பட்ட தகராறில் சிலையின் சில பகுதிகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எச்.ராஜா, கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த அதிகாரியை தமிழக டிஜிபி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.