முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு கவர்னர் ரவி அழைப்பு கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கவர்னர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் இந்த விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் நாளை நடைபெறும் விருந்தில் பங்கேற்குமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran