வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (21:17 IST)

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

mk stalin
ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
 
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரவிந்தராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்
 
அதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூர் என்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர் மாரிமுத்து என்பவர் உயிரிழந்தார்
 
இந்த இருவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலா மூன்று லட்ச ரூபாய் வழங்க உத்தரவுள்ளார். 
 
Edited by Mahendran