தப்பிக்க நினைத்தால் கடவுளும் மன்னிக்க மாட்டார் -டிடிவி. தினகரன்
சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, கொரோனா எப்போது குறையும் என்பது கடவுளுக்கே தெரியும் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது :
கொரோனா விவகாரத்தில் கடவுள் மீது பழையைப் போட்டுவிட்டு ஆட்சியாளர்கள் தப்பித்துச் செல்ல நினைக்கிறார்கள். அவர்கள் தப்பிக்க நினைத்தால் கடவுளும் மன்னிக்க மாட்டார். நிலைமை மோசமாகி வருவதை மறைக்கவே கடவுள் மீது பழி போடுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்