வீட்டுக்கு வீடு குவார்ட்டர் கொடுங்கள்: மன்சூர் அலிகான்
கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் குவாட்டர் மதுபானம் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூரலிகான் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூரலிகான் ’கொரோனா நோயிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். தினக்கூலி தொழிலாளர்கள் இதனால் வேலை இன்றி கஷ்டப்படுகின்றனர்
தொட்டாலே தீட்டு என்பதை நியாயப்படுத்தும் வகையில் பீதியை கிளப்பி வருகின்றனர். அப்படியானால் கொரோனா நோயாளிகள் தொட்ட நோட்டுகளை எரிப்பார்களா? என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மேலும் நமது பண்பாடு ஆரத்தழுவி வணங்குவது தான் என்றும் நமது பண்பாட்டிற்கு எதிராக தீண்டாமையை அரசு மக்கள் மத்தியில் புகுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் தான் கொரோனா பரவுகிறது என்றால் வெளி நாட்டினர் இந்தியா வருவதை தடுப்பதை விட்டுவிட்டு உள்ளூரில் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது என்ன நியாயம் என்று மன்சூர் அலிகான் கூறினார்
மேலும் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்கு வீடு மதுபானத்தை அரசே வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது