செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (20:16 IST)

மார்ச் 22 ல் - 5 லட்சம் லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தகவல் !!

மார்ச் 22 ல் - 5 லட்சம் லாரிகள் ஓடாது -லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தகவல் !!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில்,கொரோனாவால் இன்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
 
இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி,  சுய ஊரடங்கு உத்தரவை அறிவுறுத்தினார் பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.
 
இந்நிலையில், மார்ச் 22 சுய ஊரடங்கு உள்ளதால்,  தமிழகத்தில் 5 லட்சம் வாகனங்கள் இயங்காது என லாரி உரிமையாளர் சம்மேள சம்மேளன  செயலாளர் வாங்கிலி தகவல் தெரிவித்துள்ளார்.