நாளை முதல் நாடு முழுவதும் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் கட்ட தடுப்பூசி சமீபத்தில் போடப்பட்ட நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28 நாள்களில் அடுத்த கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் தமிழகம் உள்பட நாளை முதல் இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது
தமிழகத்தில் மட்டும் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் நாளை 2வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது