வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (18:45 IST)

உலகிலுள்ள கொரோனா வைரஸ்களை ஒரு பாட்டிலில் அடைக்கலாம்!!

உலகில் பல கோடி மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரளவு நோய்த் தொற்று மட்டும் இறப்பு விகிதம் குறைந்தாலும் கொரொனா பாதிப்பு இன்னும் முழுவதுமாகக் குறையவில்லை.

தற்பொது இரண்டாவது அலையாக கொரொனா தொற்று உருமாறி அனைத்து நாடுகளிலும் பரவிவருகிறது. எனவே இதன் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து வருகின்றன.

இந்நிலையில், கொரொனா வைரஸ் அளவு குறித்து ஆராய்ந்து வந்த கணிதவியல் வல்லுநர் ஒரு ஆச்சர்யமான உண்மையைக் கூறியுள்ளார்.

அதன்படி, உலகிலுள்ள ஒட்டுமொத்த கொரொனா வைரஸைகளையும் ஒரே ஒரு 330 ml cool drinks பாட்டிலில் அடைந்து விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.