1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (18:26 IST)

முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி கரூரில் ஆர்பாட்டம்

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்.சுற்றுச்சூழல் போராளி முகிலன் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மணல் குவாரிகளை எதிர்த்து கடுமையான போராட்டங்களை நடத்தினார்.இதனால் பல குவாரிகள் மூடப்பட்டது. 

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தினார் இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக பல ஆதாரங்களை வீடியோவாக கடந்த 13 தினங்களுக்கு முன்னர் முகிலன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

அதன்பிறகு முகிலன் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக ரயில் நிலையம் வந்தார்.  அதன்பிறகு முகிலன் மதுரைக்கும் வரவில்லை வேறு எங்கும் செல்லவில்லை திடீரென்று காணாமல் போய்விட்டார். முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
 
கரூர் மாவட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன்  கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.