செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:11 IST)

சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் திட்டம்: விலை உயருமா?

sambar onion
சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் திட்டம்: விலை உயருமா?
கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது
 
சின்ன வெங்காயத்தின் விலை தற்போது கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை ஆகி வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது
 
மிக அதிகமாக விளைச்சல் காரணமாகவே விலை வீழ்ச்சி அடைந்ததாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உற்பத்தியாகும் சின்ன வெங்காயத்திற்கு துபாய் போன்ற நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர் 
 
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்தால் தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை ஏறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது