வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (13:38 IST)

கிணற்றில் தண்ணீர் வராததால் சோகம்..! தற்கொலை செய்து கொண்ட விவசாயி!

ஈரோட்டில் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் விவசாயி ஒருவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். 71 வயதான இவர் தனது தோட்டத்தில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளார். ஆனால் எதிலும் தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

இதனால் கடந்த சில காலமாகவே விரக்தியில் இருந்து வந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதுடன் தென்னை மரங்களுக்கு வைக்கும் சல்பாஸ் விஷ மாத்திரையையும் உட்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தாமதமாகவே சென்னியப்பன் தன் மகனிடம் கூற உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.