புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (20:10 IST)

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ..தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் தமிழத்தில் கொரொனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அழகு நிலையங்கள்,சலூன்களில் குளிர்சாதனம் இல்லாமல் 505 வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொற்றுப் பரவல் அதிகம் உள்ளதாக கூறப்படும் கோவை, நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட  11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதில், அரசுப் பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களில் நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மதிவண்டிகள் மற்றும் இரு சக்கரவாகங்கள் பழு நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்க்கப்பட்டுள்ளது.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி எனவும், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.