செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஜூலை 2018 (22:26 IST)

தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆ.ராசா தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


திமுக தொண்டர்களின் எண்ணிக்கை காவேரி மருத்துவமனையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தொண்டர்கள் மத்திய பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கருணாநிதியின் உடல்நலம் சீராக உள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்காலிமாக சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நிலை சீராகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தலைவர் கருணாநிதி நல்ல நிலையில் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.