இறப்பில் கூட அரசியல் செய்கிறார் ஸ்டாலின் - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
திருச்சி அருகே நடுக்கல் பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ( 2 வயது). கடந்த 25 ஆம் தேதி, வீட்டில் அருகே இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். இதற்கு தமிழக அரசு அத்துணை பெரிய தீவிர முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல் இன்று அதிகாலை 2: 30 மணி அளவில் சுஜித் உயிரிழந்தான். இதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சுர்ஜித் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி அருகே பாத்தியாபுதூரில் குழந்தை சுர்ஜித்தின் கல்லறையில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அதில், இறப்பில் கூட அரசியல் செய்வது திமுகவும் , ஸ்டாலினும் தான் என குற்றம்சாட்டியுள்ளார்.
குழந்தை மீட்பு நேரத்தில் குழந்தை பற்றியும் மரணத்தை பற்றியும் குறை சொல்வது தவறான விசயம் என்று தெரிவித்தார்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.