1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 மார்ச் 2018 (12:00 IST)

அனுமதி இல்லாமல் சென்றால் துயர சம்பவம் - முதல்வர் பேட்டி

தேனி குரங்கணி மலைப்பகுதிக்கு உரிய அனுமதி பெறமால் சென்றதாலேயே தீ விபத்தில் அவர்கள் சிக்கியது தெரிய வந்துள்ளது.

 
தேனி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுக்கு சென்னையை சேர்ந்த 27 பேரும், ஈரோட்டை சேர்ந்த 12 பேரும் இரு புரிவுகளாக மொத்தம் 39 பேர் மலையேற சென்றனர். அந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 27 பேரை மீட்டனர்.  
 
ஆனால், பதட்டத்தில் பள்ளத்தாக்கில் விழந்த 9 பேரை மீட்க முடியவில்லை. எனவே, அவர்கள் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர். அதில் 6 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில், விஜயா, விவேக், தமிழ்ச்செல்வி ஆகியோர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அதேபோல், அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “ மலையேறும் பயிற்சிக்கு செல்பவர்கள் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் சென்றதால்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வருங்காலத்தில் அனுமதி இல்லாமல் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறினார். 
 
மேலும், தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற இன்று மாலை அவர் மதுரை செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.