Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர்....

Last Modified வியாழன், 8 மார்ச் 2018 (17:01 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சையான கருத்து வெளியான விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில்  திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. ஹெச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. 
 
ஆனால், அந்த கருத்தை எனது முகநூல் அட்மின் பதிவு செய்துவிட்டார். அதைப் பார்த்ததும் நான் நீக்கிவிட்டேன் என ராஜா விளக்கம் அளித்தார். ஆனால், அந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.

 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெச்.ராஜாவிற்கு தெரியாமல் அவரது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட அட்மினுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார்.
 
எதிர்ப்பு கிளம்பியதும் அட்மின் என  ராஜா பொய் சொல்கிறார் என பலரும் கருத்து கூறி வரும் வேளையில், ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :