ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:59 IST)

இரண்டாவது முறையாக அதிசயத்தை நிகழ்த்திய காப்பான் திரைப்படம்!

சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தில் வெட்டுக்கிளிகள் விவசாய பயிர்களை அழிக்கும் காட்சி ஒன்று இருக்கும். இந்த காட்சியை இதற்கு முன் யாரும் பார்த்திராத வகையில் இருந்ததால் பெரும் ஆச்சரியம் அளித்தது. இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பினார் ஆனால் இந்த படம் வெளிவந்த ஒரு சில மாதங்களில் உண்மையாகவே லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் குஜராத் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்பட ஒரு சில நாடுகளிலும் வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலத்தை அழித்து என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் காப்பான் படத்தின் காட்சி ஒன்று உண்மையாகியுள்ளது. காப்பான் படத்தில் பிரதமர் கேரக்டரில் நடித்திருக்கும் ஆர்யா விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக ”விவசாய நிலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி” என அறிவிக்கும் ஒரு காட்சி உள்ளது. இதே அறிவிப்பைதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
காப்பான் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகள் உண்மையாகவே நாட்டில் நடந்திருப்பதால் சூர்யா ரசிகர்கள் இதனை வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.