செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (19:35 IST)

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா: இங்கிலாந்தில் இருந்து திரும்பியதாக தகவல்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் உலகம் முழுவதும் சுமார் 7 கோடிக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்தியாவில் கொரோனா: வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவும் என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பல்வேறு நாட்டினர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு திரும்பியவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அமெரிக்காவிலிருந்து லண்டன் வழியாக கர்நாடகம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடதக்கது