திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (15:34 IST)

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? ரெய்ட் விட்ட தலைமை!!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கண்ட சரிவை குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளனர். 
 
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது. 
 
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுகவுக்கு கடும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. மேலும் இந்த தோல்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தின் போது  உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு நிர்வாகிகளிடையே தோல்வி குறித்து காரசாரா விவாதங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.