திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (14:35 IST)

சட்டப்பேரவையில் அன்பழகனுக்கு தடா..

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் திர்மானம் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பேசிக்கொண்டிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணியை, அன்பழகன் “உட்காரு” என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ”ஜெ. அன்பழகன், அமைச்சர் வேலுமணியை கை நீட்டி ஒருமையில் பேசியுள்ளார், இவ்வாறு அவர் அடிக்கடி செயல்படுகிறார், அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார். பின்பு அன்பழகன் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். எனினும் சபாநாயகர் ஜெ.அன்பழகனுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.