1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:38 IST)

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

ரூபாய் 4000க்கு மேல் மின்கட்டணம் இருந்தால், மின்கட்டணம் கட்டுவதற்கான புதிய விதியை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின்கட்டணம் கட்டுவதற்கு நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆன்லைனில் கட்டிக்கொள்ளும் வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், மின்கட்டணம் ரூபாய் 4000க்கு அதிகமாக இருந்தால், நேரடியாக மின்கட்டணத்தை செலுத்த முடியாது என்றும், அந்த மின்கட்டணத்தை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, ரூபாய் 4000க்குஅதிகமாக மின்கட்டணம் உள்ளவர்கள் இனிமேல் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, இன்னும் சில மாதங்களில், 2000, 3000 ரூபாய் என மின்கட்டணம் வந்தால்கூட அதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டிய நிலை வரும் என்றும், அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva