வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (10:18 IST)

ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளை எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!

Pallikalvi thurai

பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

 

 

தமிழ்நாடு பாடத்திட்ட அடிப்படையில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகவும், மேலும் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தினசரி வகுப்புகளை எடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
 

 

இந்நிலையில் காலாண்டு விடுமுறை தினத்தில் நேரடி அல்லது ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும், மீறும் பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K