வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (08:13 IST)

அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி

திமுகவின் முக்கிய தலைவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான துரைமுருகன் இன்று காலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



 
 
துரைமுருகன் அவர்களுக்கு சளி தொந்தரவு இருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
 
துரைமுருகனின் உடல்நிலை தேறி வருவதாகவும் திமுக தொண்டர்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும் திமுக தலைமை தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.