எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு எடுத்தால் ஸ்டாலினுக்கே பெரும்பான்மை கிடைக்காது: ஜெயக்குமார்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (13:47 IST)
எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினுக்கே பெரும்பான்மை கிடைக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறியுள்ளார்.

 

 
இலங்கையில் இருந்து 8 படகுகள் தமிழகத்திற்கு மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள 131 படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதுவரை இலங்கையிடம் இருந்து 42 படகுகள் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
 
எடப்பாடி அரசு பெரும்பான்மை பலத்துடன்தான் இருக்கிறது. டிடிவி தினகரனுக்கு அவரது எம்.எல்.ஏ.க்களே ஆதரவாக இல்லை. திமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு ஆதரவு இல்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அவரே ஜெயிக்கமாட்டார் என்றார்.
 
ஏற்கனவே சில நாட்களுக்கு முன் ஜெயக்குமார் ஸ்டாலினை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :