ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (13:24 IST)

டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல்  12 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும் பிற  மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில்  மருத்துவர்கள் உரிய நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.