திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 10 மே 2023 (22:36 IST)

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் தாமோதரன் பொறுப்பேற்பு

karur
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் தாமோதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த சீனிவாசன் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு கரூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர் ராஜா பொறுப்பு முதல்வராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் இருதய சிகிச்சை பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த மருத்துவர் தாமோதரன், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.