புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (19:20 IST)

'மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது' ...முக.ஸ்டாலினுக்கு அறிவுறுத்திய நடிகர்...

இந்து முறைப்படி திருமணம் செய்தவர்கள் திமுகவில் உறுப்பினராக இருக்கக்கூடாது. அவர்கள் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சராகவோ இருக்க முடியாது என்று திமுக தலைவர்  ஸ்டாலின்    அறிவிப்பாரா ...? என ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சரத்குமார் அதில் கூறியுள்ளதாவது;
 
அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் இந்து திருமணம் பற்ற் அநாரிகமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். 
 
எதிர்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின் மன உணர்வுகளைப் புணபடுத்தும் விதத்தில் பேசியது அவரது முதிர்ச்சியின்மையைக் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இந்து முறைப்படி திருமணம்செய்து கொண்டாவர்களை சட்டசபை உறுப்பினர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ,. அமைச்சராகவோ இருக்க முடியாது என்று அறிவிக்க ஸ்டாலின் தயாரா என்று ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால் விட்டுள்ளார்.
 
மேலும் இனிமேடையில் ஸ்டாலின் பேசும் போது தலைமைப்பண்புடன் மத புண்படுத்தாத வகையில் பேச வேண்டும் என்று அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.