திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (13:56 IST)

பிரதமரை சந்தித்த திமுக எம்.பி.க்கள்.. முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன??

திமுக எம்.பி.கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக பிரச்சனைகள் குறித்து 16 கோரிக்கைகள் கொண்ட கடிதத்தை வழங்கியுள்ளனர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அக்கட்சியின் திட்டங்களை விமர்சித்தும் எதிர்த்தும் வருகிறது திமுக. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியது, நவோதயா பள்ளிகள், போன்ற பலவற்றை கூறலாம்.

இந்நிலையில் இன்று திமுக எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் கடிதத்தையும் தமிழக பிரச்சனைகள் குறித்தான கோரிக்கைகளையும் பிரதமர் மோடியை சந்தித்து வழங்கியுள்ளனர்.

அந்த கடிதத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, தமிழகத்தில் ஆறுகளை இணைப்பது, மத்திய அரசு பணிகளில் தமிழகத்தில் உள்ளூர் மக்களுக்கு 90 % இடஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்துதல், விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கைவிடுதல், காவிரி குறுக்கே அணை கட்ட அனுமதிக்கான தடை உள்ளிட்ட 16 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.