திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (12:17 IST)

பிரேமலதா கேள்வி கேட்டால், பதில் சொல்லனுமா? ஸ்டாலின் தடாலடி!

இடதுசாரிகளுக்கு பணம் கொடுத்தை பற்றி செய்தியாளர்களுக்கோ, பிரேமலதாவிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த தேமுதிக படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. 
 
இது குறித்து திமுக தரப்பில் எந்த ஒரு மறுப்போ, விளக்கமோ அளிக்கப்படாத நிலையில், தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் நிதியாக திமுகவிலிருந்து கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வந்த தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டார். 
 
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின் அளித்த பதில் பின்வருமாறு, இடதுசாரிகளுக்கு திமுக ரூ.25 கோடி தேர்தல் நிதி கொடுத்ததாக எழும் கேள்விகளுக்கு, செய்தியாளர்களுக்கோ, பிரேமலதாவிற்கோ பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் தந்துவிட்டோம் என தடாலடியாக கூறினார்.