செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (14:48 IST)

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை!

thangavel dmk
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தைச் சேர்ந்த திமுக  நிர்வாகி ஒருவர் தன் உடலில் பெட்ரோல்  ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   இந்த அரசு ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஆர்வம் காட்டி வருவதற்கு எதிர்க்கட்சிகள் பலரும்  விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 வது அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது.

அந்த அறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. 

இதற்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் , நாம் தமிழர் உள்ளிட்ட  பல கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வசித்த வந்த திமுக நிர்வாகி  தங்கவேல்(85) இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் தன் உடலில் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.