கோயம்புத்தூர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ஆர்சிசி சென்ரல் ஆகியவற்றுடன் இணைந்து,16வது தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள் வீச்சு போட்டியை நடைபெற்றது.
இதில் கோவை கே.பி.ஆர்., கல்லூரியில் 2024 மார்ச் 21 முதல் 23 வரை இப்போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியை கேபிஆர் நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, பி.சி.ஐ., துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகர், திட்ட தலைவர் ஏ.காட்வின் மரியா விசுவாசம் முன்னிலையில் போட்டியை மாவட்ட கவர்னர் நியமனம் செல்லா கே ராகவேந்திரா துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் சுமார் 200 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 120 ஆண்கள், 80 பெண்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, வலிமை, உறுதி, திறமையை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டு வீரர்கள்,பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு, தங்களை தேசிய அளவிற்கு முன்னேற்றியுள்ளனர்
இது குறித்து திட்ட தலைவர் மற்றும் ரோட்டராக்ட் மாவட்ட ஆலோசகர் ஏ காட்வின் மரியா விசுவாசம் கூறும்போது :-
இந்த போட்டியானது, சிறப்பாக செயல்பட கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் வாழ்க்கையில் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மாற்றுத்திறன் படைத்த தனிநபர்களின் திறனை மேம்படுத்தவதையும், இப்போட்டியை நடத்துவதையும் பெருமையாக கருதுகிறது.
வேற்றுமையிலும் ஒற்றுமை, சமத்துவத்தை இப்போட்டி முன்னுதரணமாக திகழ்கிறது.
மாற்றுத் திறனாளிகளின் இந்த போட்டியானது, பிற விளையாட்டு போட்டிகளில் உள்ளோருக்கு தடைகளை தாண்ட ஆக்கமும் ஊக்கமும் தருவதாக இருக்கும்.
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன், கடந்த 10 ஆண்டுகளாக கை பந்து, எறிபந்து போட்டிகளை நடத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு,தனியார் பங்களிப்புடன் ஒரு மைதானம் அமைக்க, முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அவர்களது வெற்றியையும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும். அவர்களது ஊக்கமும் உறுதியும் நமக்கு உத்வேகம் தருவாக இருக்கிறது.
அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டால் மாற்றங்களை உருவாக்க முடியும்.
இந்த நிகழ்வானது விளையாட்டு வீரர்களின் திறமையையும், உறுதியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விளையாட்டு மீதான ஆர்வத்தை பார்வையாளர்கள் வெளிப் படுத்துவதுடன், போட்டியையும் கண்டு பரவசமடைந்தனர்.
விருதுகளை பெற மட்டுமல்ல இந்த போட்டிகள், தடைகளையும், தடங்கல்களையும் உடைத்து முன்னேற வேண்டும், என்பதையும், உறுதியும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.