வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (20:01 IST)

கோவையில் அண்ணாமலை வெற்றி பெற்றால் 2026ல் முதல்வர் வேட்பாளர் யார்?

annamalai
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ள நிலையில் அதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெளியான அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஒருவேளை கோவை தொகுதியில் வெற்றி பெற்றால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஆகும் ஆசை இருப்பதை அடுத்து ஒருவேளை அண்ணாமலை வெற்றி பெற்றால் நிர்மலா சீதாராமன் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவை தொகுதியில் தற்போது மும்முனைப் போட்டியில் உள்ளது என்பதும் பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

கடந்த 20 19 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்   பாஜக வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இந்த தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva