செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:23 IST)

ரஜினிக்கு ஒரு நியாயம்! விஜய்க்கு ஒரு நியாயமா? – சப்போர்ட்டுக்கு வந்த தயாநிதிமாறன்

வருமானவரி சோதனையில் ரஜினிக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயம் என பாகுபாடு பார்ப்பதாக தயாநிதிமாறன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோரிடம் வருமானவரி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் விஜய் வீட்டில் மட்டும் இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்றது. இதற்காக படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரடியாக சென்று வருமானவரி துறையினர் அழைத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ள எம்.பி தயாநிதி மாறன் வருமானவரித்துறையினர் பாரபட்சத்தோடு நடந்து கொள்வதாகவும், வருமானவரி வழக்கில் ரஜினி விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் விஜய் கட்டாயப்படுத்தி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.