புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (11:04 IST)

மதுரையில் சித்திரை திருவிழா; கோவிலுக்குள் அனுமதிக்க பக்தர்கள் வாக்குவாதம்!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று கொடியேற்றம் நடைபெறும் நிலையில் உள்ளே அனுமதிக்க கோரி பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் சில புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கோவில்களில் திருவிழா உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மக்கள் கூட்டத்தை அனுமதிக்காமல் திருவிழா சமயத்தில் நடத்தப்படும் பூஜைகள், அலங்காரங்களை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. இன்று கொடியேற்றம் நடைபெறும் நிலையில் அதை காண தங்களை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் பலர் காலையிலேயே மீனாட்சி அம்மன் கோவில் முன்னர் கூடியதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீஸ் மறுத்ததால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.