புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:08 IST)

27% இடஒதுக்கீடு போதாது, 69% ஒதுக்கீடு வேண்டும்: பாராளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேச்சு!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு போதாது என்றும் 67 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு நாடு முழுவதும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்பது போதாது என்றும் 69 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் வலியுறுத்தினார் 
 
மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை குறித்து முதல் முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான் என்றும் அவர் மேலும் கூறினார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது