ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (16:18 IST)

பொய்ச்செய்தி.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் தங்கர்பச்சான் ஆவேசம்..!

பாமக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியான நிலையில் அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னணி பத்திரிகை ஒன்றில் தங்கர் பச்சான் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி போட்டியிட வைத்துள்ளனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளராக நான் போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்

இவ்வாறான  பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்

ஏற்கனவே  உண்மை கண்டறியும் பிரிவு தங்கர்பச்சான்  போட்டியிட மறுப்பு என்ற செய்தி போலியானது என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva