செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (16:14 IST)

யூடியூப் சேனல்களுக்கு எதிராக நீதிமன்றம் கருத்து..! நேர்காணல் எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை..!!

highcourt
அவதூறு கருத்துகளை தெரிவிக்க தூண்ட கூடிய நேர்காணல் எடுப்பவர்களை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவல் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர்  கைது செய்யபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமின் வழங்கவேண்டும் என நேர்காணலை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.  மேலும் நேர்காணல் அளிக்கவருபவர்களை அவதூறு கருத்துகளை தெரிவிக்க தூண்ட கூடிய நேர்காணல் எடுப்பவர்களை முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

 
ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனுவுக்கு காவல்துறையினர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.